கோலாலம்பூர், செப் 4: சாரா உதவி திட்டம், நான்காவது நாளில், நாடு முழுவதும் 1.8 மில்லியன் பெறுநர்களை உள்ளடக்கிய RM117.1 மில்லியன் விற்பனை சாதனையுடன் சீராக நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 2 அன்று 1.1 மில்லியன் பெறுநர்களால் பெறப்பட்ட RM76.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது இத்தொகை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"செப்டம்பர் 2 அன்று பதிவான பரிவர்த்தனை விகிதம் 95 சதவீதத்துடன் ஒப்பிடும்போது தற்போது 99.7 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஆகஸ்ட் 31 அன்று செயல்படுத்தப்பட்டதிலிருந்து, 4.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் RM100 SARA உதவி தொகையை பயன்படுத்தி அடிப்படை பொருட்களை வாங்கியுள்ளனர். மொத்த மக்களின் பரிவர்த்தனை நாடு முழுவதும் RM 312.6 மில்லியனை எட்டியுள்ளது.
இந்த உதவி தொகை டிசம்பர் 31, 2025 வரை செல்லுபடியாகும். மேலும் நாடு முழுவதும் 7,300க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இதைப் பயன்படுத்தலாம்