ஆப்கானிஸ்தான், செப் 3 - ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது 2,800 பேர் காயமடைந்துள்ளனர்.
மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புக் குழுவினர், சில பகுதிகளுக்குச் செல்ல சிரமத்தை எதிர்நோக்கியதாக அமலாக்கத் தரப்பு தெரிவித்தது. குறைந்த வளங்களைக் கொண்டிருக்கும் அந்நாட்டின் நிலைமையை இந்நிலநடுக்கம் மோசமாக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பேரழிவின் சுமையைக் குறைக்க, அந்நாடு அனைத்துலக உதவியைக் கோரியுள்ளது.
கிழக்கு மாகாணங்களான குனார் மற்றும் நங்கர்ஹாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 812 பேர் உயிரிழந்ததாக அரசாங்கப் பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹிட் தெரிவித்தார். மரண எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெர்னாமா