கோலாலம்பூர், செப். 3 - நாட்டின் முன்னணி சில்லறை வணிக நிறுவனமான 99 ஸ்பீட் மார்ட் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் சீனாவிலுள்ள ஃபுஜியான் மாநிலத்தின் ஃபுஜோவில் முதல் கடையைத் திறப்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் உயர்வு கண்டன.
காலை 10.25 மணிக்கு அதன் பங்குகள் நான்கு காசு அதிகரித்து வெ.2.54 ஆக இருந்தன. மொத்தம் 16.4 லட்சம் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன.
தனது வெளிநாட்டு விரிவாக்கம் குறித்து உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளை நேற்று பங்குச் சந்தையிடம் தாக்கல் செய்த அறிக்கையில் 99 ஸ்பீட் மார்ட் உறுதிப்படுத்தியது.
அந்நிறுவனம் ஃபுஜோவில் முன்மாதிரி விற்பனை நிலையங்களை அமைக்கும் என்றும் பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அது மேலும் கூறியது.
சீனாவில் முதல் கடை திறப்பு உறுதியானவுடன் 99 ஸ்பீட்மார்ட் பங்குகள் உயர்வு கண்டன
3 செப்டெம்பர் 2025, 10:06 AM