கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 - மலேசியாவின் பெண்கள் இரட்டையர் நட்சத்திரங்கள் பெர்லி தான்-எம்.தீனா இரட்டையர் பாரிஸில் நடந்த பி. டபிள்யூ. எஃப் உலக சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில் தைரியமாக போராடினார்கள், ஆனால் 21-14,20-22,21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் லியு ஷெங்ஷு மற்றும் டான் நிங் ஆகியோரிடம் தோல்வியடைந்தனர்.
தோல்வி என்பது வேதனையே ! என்ற போதிலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இம்முறை நாடு முன்னேறியிருப்பது ஒரு சாதனையே, 2023 ஆம் ஆண்டில் காலிறுதி மட்டுமே முன்னேறியதை விட, இது சிறப்பானது, பதக்கமே வெள்ளாத போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையாவது நாட்டுக்கு பெற்றவர்களை கொண்டாடுவதும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதும் நமது விளையாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் செயலாக மலேசியர்கள் கருதுகிறார்கள்.
உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடியாகவும் அவர்கள் வரலாறு படைத்தனர்.
கலப்பு இரட்டையர் ஜோடி சென் டாங் ஜீ மற்றும் தோ ஈ வீ ஆகியோர் முன்பு வென்ற தங்கத்துடன் ஈடான சாதனையை அவர்கள் தவறவிட்டாலும், அவர்களின் தைரியம், மனவுறுதி மற்றும் சுத்தமான, மூல சக்தியின் பிரகாசங்கள் மலேசிய ரசிகர்களின் இதயங்களின் அவர்களை தேவதைகளாக கொண்டாட இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.