ad

சிலாங்கூரில் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்

1 செப்டெம்பர் 2025, 5:20 AM
சிலாங்கூரில் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்
சிலாங்கூரில் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்

சபாக் பெர்ணம், செப். 1- ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் அண்மையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பேரிடருக்கான எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள மீட்புக் குழுக்களை சிலாங்கூர் அரசு ஆயுத்தப்படுத்தவுள்ளது.

தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் மலேசிய வானிலை ஆய்வுத் துறையிடம் தேவையான கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிகாமாட்டில் இதுவரை ஏற்பட்ட பூகம்பங்கள் மிகவும் குறைந்த அளவிலானவை என அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை. இருப்பினும் வானிலை ஆய்வுத் துறையுடன் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

தொடக்கத்தில் நாம் எரிமலை மற்றும் பூகம்ப பகுதியின் சுற்றுவட்டத்திற்கு அப்பால் இருந்தோம். இருப்பினும் அதன் விளைவுகளை நம்மால் உணர முடிகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதிலிருந்து இது நிகழ்ந்து வருகிறது. நாம் நில அதிர்வுகளை உணர்ந்து வருகிறோம்.

இருப்பினும் இறைவன் அருளால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். பூகம்பத்தை எதிர்கொள்வதற்கான பிரத்தியேக ஆற்றல் முன்பு இல்லாத போதிலும் மாநில மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தங்களின் ஆற்றலை வலுப்படுத்தி வருகின்றன என்று அவர் சொன்னார்.

நேற்று நடைபெற்ற அணிவகுப்பின் போது நாம் சுயமாக உருவாக்கிய துரித மீட்புக் குழுவின் ஆற்றலை நாம் கண்டோம். நமது நிபுணத்துவத்தில் பூகம்பம் உள்ளடக்கப் படாத போதிலும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை நமது கட்டுப்பாட்டில் உள்ளன

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.