தோக்கியோ, ஆக. 28- இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பட்டப்படிப்பு தொடர்பான வாய்ப்புகளைக் கண்டறியும் நோக்கில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக தோக்கியோவில் உள்ள மலேசிய தூதர் டத்தோ ஷாரில் எஃபெண்டி அப்துல் கனியுடன் அவர் சந்திப்பு நடத்தினார்.
மலேசிய மாணவர்கள் குறிப்பாக இந்திய சமூகத்தினர் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் மற்றும் வான்போக்குவரத்து துறைகளில் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஷாரில் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த துறைகளில் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டு மாணவர்கள் இத்துறைகளில் அதிக கவனம் செலுத்தினால் மலேசியாவில் மனிவள மேம்பாடு மேலும் உயரிய நிலையை அடையும்.
மாணவர்கள் இளம் பிராயத்திலே தங்கள் இலக்காக கொண்ட துறையை இப்போதே தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் தொழிலதிபர்களாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இளையோர்களின் பட்டப்படிப்பு,வேலை வாய்ப்புகளை கண்டறிய பாப்பாராய்டு ஜப்பான் பயணம்
28 ஆகஸ்ட் 2025, 1:57 AM