புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 - தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை இணையத்தை பயன்படுத்துபவர்கள் முழுமையாக நம்பும் போக்கு குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கவலை தெரிவித்தார்.
அதோடு, மோசடிக்கு ஆளாகாமல் இருக்க மக்கள் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உள்ளடக்கம், உயர் ஊடக நெறிமுறைகள் மற்றும் நேர்மையைக் கொண்ட பிரதான ஊடகங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைப் போன்றது அல்ல என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.
மக்களவையில் தகவல் தொடர்பு அமைச்சிற்கான 13வது மலேசியத் திட்டம் தீர்மானம் மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்தபோது ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா