கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடியை சிலாங்கூர் காவல் துறை வழங்கவுள்ளது.
இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்ட போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (BSPTD) கவுண்டர்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து குற்றங்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படாது மாறாக குறிப்பிட்ட அபராதங்களுக்கு மட்டுமே 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஷா ஆலம், கிள்ளான் உத்தாரா, கிள்ளான் செலாத்தான், KLIA, சிப்பாங், கோலா லங்காட் சுபாங் ஜெயா, கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம். கோம்பாக், அம்பாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, செர்டாங், காஜாங் மற்றும் சுங்கை பூலோ உள்ளிட்ட 16 இடங்களில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.