சிப்பாங், ஆகஸ்ட் 18 - இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு செயல்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ``KLIA Aerotrain`` இரவு நேர பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
பயணிகளின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் உச்ச நேரங்களில் அல்லாமல், நள்ளிரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என மலேசிய விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், Aerotrain சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது; என்றாலும் பேருந்து சேவை வழங்கப்படும்.
முழுமையான செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதிச் செய்வதற்கு இந்த திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் அவசியம் என மலேசிய விமான நிலையம் கூறியது.
Aerotrain செயல்படத் தொடங்கியதிலிருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ள நிலையில் 18,800 பயணங்களையும் அது நிறைவு செய்துள்ளது.