ad

சாரா கைரினா மரணத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து

18 ஆகஸ்ட் 2025, 4:42 AM
சாரா கைரினா மரணத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து

புத்ராஜெயா, ஆக.18 - பகடிவதைக்கு ஆளானவர்களின் மரணங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளார்.

பகடிவதைக்கு ஆளானவர்களின்
மரணத்தை ஏமாற்றுதல் மற்றும் நிந்தனை நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று நிதிமைச்சருமான அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை  நாங்கள் அலற்றைக்  கட்டுப்படுத்துகிறோம் (இருப்பினும்) வரம்புகள் உள்ளன. உதாரணமாக, தாம்
உடற்கூறு  நிபுணர் என்று கூறிக்கொண்ட ஒருவர் (சாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனை) தொடர்பாக ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்.

இது லட்சக்கணக்கான மக்களின் மனதில் விஷத்தை ஏற்றுகிறது.  நண்பர்கள், மனைவிகள் மற்றும் அறிமுகமானவர்கள் பிரதமரே! இது என்ன பிரதமர்?  என்று என்னிடம் கேட்கிறார்கள்.

ஜாரா கைரினா இறந்துவிட்டார். பின்னர் இதை
ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி மற்றவர்களை தாக்குகிறோம் என்று அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான
மாதாந்திர கூட்டத்தில்  உரையாற்றும் போது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.