ஷா ஆலம், ஆகஸ்ட் 14: பகடிவதை ஒரு தீவிரமான விஷயம் மற்றும் அவை முழுமையாகக் கவனிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் (யுனிசெல்) தலைவரும் துணைவேந்தரும் விவரித்தனர்.
பகடிவதை மற்ற தனிநபர்களுக்கு அநீதி இழைப்பதாகும். மேலும், இது ஒரு கடுமையான பாவமாகும் என்று பேராசிரியர் எமரிட்டஸ் டத்தோ டாக்டர் இர் ஹாசன் பாஸ்ரி கூறினார்.
“கல்வி மிகவும் முக்கியமானது. பகடிவதை குழந்தைப் பருவக் கல்வியின் முதலே ஒழிக்கப்பட்ட வேண்டும் ,” என்று அவர் யுனிசலின் எட்டாவது தலைவராகவும் துணைவேந்தராகவும் நியமனக் கடிதத்தைப் பெற்ற பிறகு கூறினார்.
பொறியியல் நிபுணருக்கான நியமனக் கடிதத்தை சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்.
இதற்கிடையில், யுனிசலின் மாணவர்கள் எப்போதும் வாழ்க்கையில் மதத்தையும் உன்னத மதிப்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் சட்டங்களையும் மீறக்கூடாது என்று ஹாசன் அறிவுறுத்தினார்.
“பகடிவதை நெறிமுறையற்றது மற்றும் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். . இது தொடர்பான அனைத்து வழக்குகளும் காவல்துறையினரால் விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.