ad

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் இந்தியர்களின் ஆர்வமின்மை ஏமாற்றமளிக்கிறது.

9 ஆகஸ்ட் 2025, 11:04 AM
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்  இந்தியர்களின்  ஆர்வமின்மை ஏமாற்றமளிக்கிறது.
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்  இந்தியர்களின்  ஆர்வமின்மை ஏமாற்றமளிக்கிறது.

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 9 - இன்று புஞ்சாக் ஆலமில் உள்ள எம்பிகேஸ் (MPKS) மண்டபத்தில் MYFutureJobs உடன் இணைந்து நடத்தப்பட்ட   வேலைவாய்ப்பு சந்தை  சிலாங்கூர் அரசால் எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆறாவது முறையாக  இவ்வாண்டில் நடத்தப்படுகிறது.      

இங்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மொத்தம் 82.9%, உள்ளூர் தொழிலாளர் தேவையை வலுப்படுத்தவும் மக்களின் பொருளாதார நல்வாழ்வை உறுதி செய்யவும் மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப, சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ள வேலை வாய்ப்புகள் ஆகும்.

இதில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவங்களில் MAH SING HEALTHCARE SDN BHD, NISSIN INTERNATIONAL LOGISTICS (M) SDN BHD மற்றும் RADICARE (M) SDN BHD ஆகியவை அடங்கும். இவை தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் போன்ற முக்கியமான துறைகளில் RM4,000 முதல் RM13,000 வரை சம்பளத்துடன் கூடிய பதவிகளையும் வழங்குகின்றன.

சிலாங்கூர் மாநில அரசு மாநிலம் முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் தொழில் வாய்ப்புகளின் வலையமைப்பை வலுப்படுத்தும். நிலையான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பு மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதில் சிலாங்கூர் பென்யாயாங்கின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் உள்ளது.

மேலும் இதில் திறந்த நேர்காணல், சுகாதார பரிசோதனைகள், முகவர் கண்காட்சிகள் மற்றும் தொழில் ஆலோசனை சேவைகள் ஆகியவையும் இடம் பெற்றன. சிலாங்கூர் அரசாங்கம் மக்கள் மீது கொண்ட அக்கறையால் இதுபோன்ற நிகழ்வுகளை அவ்வபோது ஏற்பாடு செய்தாலும், அதற்கான வரவேற்பு மற்ற இனத்தவரை காட்டிலும் இந்தியர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது என டாக்டர் பவித்ரா வருத்தம் தெரிவித்தார்.

இவ்வாண்டு இந்த ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் இன்னும்  மூன்று இடங்களில் நடைபெற  உள்ளது. அவை கிள்ளான், சபாக் பெர்ணம் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார். ஆகவே, இப்பொழுது   பணிபுரியும் இடத்தில், வேலைகளில் அல்லது ஊதியத்தில்  திருப்தி கொள்ளாதவர்களும் , வாழ்வில் மேம்பாட்டை தேடும்  மக்கள் அனைவரும்  இதுப்போன்ற வாய்ப்புகளை  பயன் படுத்திக் கொள்ள வேண்டும்  என கேட்டுக் கொண்டார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.