ad

சிலாங்கூர் ‘‘ சுக்மா 2026’’ விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பத்தை பட்டியலில் இணைக்க வேண்டும் !

8 ஆகஸ்ட் 2025, 3:23 PM
சிலாங்கூர் ‘‘ சுக்மா 2026’’  விளையாட்டுப் போட்டிகளில்  சிலம்பத்தை பட்டியலில் இணைக்க வேண்டும் !
சிலாங்கூர் ‘‘ சுக்மா 2026’’  விளையாட்டுப் போட்டிகளில்  சிலம்பத்தை பட்டியலில் இணைக்க வேண்டும் !
சிலாங்கூர் ‘‘ சுக்மா 2026’’  விளையாட்டுப் போட்டிகளில்  சிலம்பத்தை பட்டியலில் இணைக்க வேண்டும் !

கிள்ளான் அக். 8 - அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் ‘‘ சுக்மா 2026’’ என்னும் மலேசியா விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பத்தை பதக்க விளையாட்டு பட்டியலில் இணைக்க வேண்டும்  என சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

24c2947e-4ca9-41cf-90ff-3829f888b4b0.jpeg

சுக்மா போட்டியில் சிலம்பம் விடுபட்ட விவகாரத்தை இன்று நடைபெறும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்,  புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ், கோத்தா கெமுனிங் உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோர் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியுடன் சந்திப்பு நடத்தியதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.

 எதிர்பார்த்தப்படி அதற்கான கோரிக்கை மனுவினை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ பாப்பா ராய்டுவும் ஆட்சிக் குழு கூட்டத்தில் சமர்பித்து  அதற்கான ஒப்புதலை பெற்று விட்டதாக  இன்று மாலை நடந்த பத்திரிகைகளுடனான சந்திப்பில் கூறினார்.

ஆட்சிக் குழுவின்  கோரிக்கை மத்திய விளையாட்டுத்துறை  அமைச்சுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ நேற்று கூறியிருந்தது போல் சுக்மாவை ஏற்பாடு செய்யும் மாநிலம் என்ற முறையில் சிலம்பத்தை சேர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்றார்.

ஆகவே. அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் மந்திரி புசாரும், மாநில அரசின் ஆதரவை  இன்று  ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வழி அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.