ஷா ஆலம், ஜூலை 30 – எதிர்வரும் சனிக்கிழமை கோலா சிலாங்கூரில் உள்ள எம்.பி.கே.எஸ். புஞ்சாக் ஆலம் மண்டபத்தில் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.
ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நேர்காணல் நாளில் தொடர்புடைய சான்றிதழ்களின் நகலைக் கொண்டு வர வேண்டும்.
இதற்குப் பிறகு, ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் கிள்ளான் (செப்டம்பர் 27 – ஹம்சா மண்டபம்) மற்றும் சபாக் பெர்ணம் (அக்டோபர் 11 – துன் ரசாக் மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
அதனை தொடர்ந்து, இத்திட்டம் சிப்பாங் (நவம்பர் 15 – கோமுனிட்டி பிபிஎஸ்டி மண்டபம்) இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.