ரவாங், ஆக. 4- இங்குள்ள பத்து ஆராங் தமிழ் பள்ளியில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு ரவாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் தேவசெல்வன் அந்தோணிசாமி ஏற்பாட்டில்தலா 100 வெள்ளி மதிப்புள்ள இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
நேற்று ரவாங், தாசேக் புத்ரி ஹரி ஹரி ஜவுளி நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்குத் தேவையான சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், இந்திய சமூகத் தலைவர் குமார் உள்ளிட்டபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் செஜாத்தி மடாணி திட்டத்தின் கீழ் தாம் மேற்கொண்ட மீன்வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கொண்டுதாம் இந்த உதவித் திட்டத்தை மேற்கொண்டதாக தேவசெல்வன் கூறினார்.
வசதி குறைந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கி இந்த செஜாத்திமடாணி திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர்சுவா வேய் கியாட் ஆகியோருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த செஜாத்தி மடாணி திட்டத்தை அரசாங்கம் தற்போது ஒரு முறை மட்டுமேஅமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு விரிவுபடுத்தினால் வசதி குறைந்த தரப்பினர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வாழ்க்கைத் தரத்தைஉயர்த்திக் கொள்வதற்கும் மேலும் பலரை தொழில்முனைவோரைஉருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
செஜாத்தி மடாணி திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கிய 50,000 வெள்ளிமானியத்தில் பத்து ஆராங்கில் உள்ள தனது சொந்த நிலத்தில் இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேவசெல்வன் தொடக்கினார்.தலா 400 காலன் அளவிலான எட்டு பிளாஸ்டிக் தொட்டிகளில் சுமார் 2,000 சிவப்புநிற தெலாப்பியா வகை மீன்கள் இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டன.
இவ்வாறுதொட்டிகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் ஆறு மாத காலத்தில் நன்கு வளர்ந்து கடந்த மாதம்விற்பனைக்கு வந்தன. இதன் வழி செஜாத்தி மடாணி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டஇந்த மீன் வளர்ப்புத் திட்ட வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் எனதேவசெல்வன் குறிப்பிட்டார்.