ad

ம.இ.க உடனான உறவுகளை புதுப்பிக்க பி.என் தலைவர்கள் தயாராக உள்ளனர்

4 ஆகஸ்ட் 2025, 8:27 AM
ம.இ.க உடனான உறவுகளை புதுப்பிக்க பி.என் தலைவர்கள் தயாராக உள்ளனர்

பெட்டாலிங் ஜெயா ஆக 04;- பெரிக்காத்தான் நேஷனல்  உடன் இணைந்துள்ள ‘’மலேசிய இந்திய மக்கள் கட்சி  (ம.இ.ம.க) தலைவர்கள்,  ம.இ.கவுடன் ஒத்துழைப்பை ஆராயத் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.

ம.இ.க  அதன் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த எந்தவொரு அரசியல் பிரிவுடனும் விவாதங்களில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து  பெரிக்காத்தான் ம.இ.ம.க தலைவர்கள்  அவர்களின் தயார் நிலையை தெரிவித்துள்ளனர்.  

ம.இ.க பலவீனமான நிலையில் இருப்பதாகவும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப "நியாயமான நடவடிக்கைகளை" எடுக்க வேண்டும்  என்றும் ஒப்புக் கொண்டு, கட்சி அதன் எதிர்காலம்  குறித்து  மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.  

பாஸின் முஸ்லிம் அல்லாத ஆதரவாளர்கள் பிரிவின் (டி. எச். பி. பி) தகவல் பிரிவு தலைவர் பாலச்சந்திரன் ஜி கிருஷ்ணன், பிஎன் உடனான ஒத்துழைப்பு ம.இ.க வுக்கு ஒன்றும் "புதியது அல்ல" என்றும் ம.இ.க வுக்கு நினைவூட்டினார். ம.இ.க  முன்பு முஹைதீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டார்.

ம.இ.காவின் புதிய அங்கத்துவ ஒத்துழைப்புக்கு திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்திய பாலச்சந்திரன், தவறான புரிதல்களை தவிர்க்க பாஸ்  மற்றும் பிற பிஎன் கட்சிகளின் கொள்கைகளை ம.இ.க முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

"நாங்கள் அவர்களை வரவேற்கிறோம், ஆனால் பாஸ் உள்ளிட்ட கூறு கட்சிகளின் கொள்கைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இதனால் அவர்களின் இருப்பு பின்னர் எந்த மோதலையும் ஏற்படுத்த கூடாது" என்று அவர் கூறினார்.  

ம.இ.க, , டிஹெச்பிபி, கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் பெர்சத்து இணை பிரிவு துணைத் தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவன் எடுத்துரைத்தார்.   ம.இ.க வின் அடிமட்ட வலிமை மற்றும் மலேசிய அரசியலில் நீண்ட கால இருப்பை ஒப்புக் கொண்ட சஞ்சீவன், இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் திரும்பி வருவதாக தெரிகிறது என்றார்.    

"அவர்கள் ஒத்துழைக்க விரும்பினால் ம.இ.காவின் ஒத்துழைப்பு பிஎன்-கூட்டணிக்கு வலுசேர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார். ம.இ.ம.க தலைவர் பி. புனிதன் கூறுகையில், விக்னேஸ்வரனுடன் அவருக்கு நல்ல உறவு இருந்தபோதிலும், அவர்கள் எந்த வகையான அரசியல் ஒத்துழைப்பையும் விவாதிக்கவில்லை என்றார்.  

13 வது மலேசிய திட்டத்தை செயல்படுத்த ஒற்றுமை அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ம.இ.க தலைவர் சமீபத்தில் ஆதரவு வெளிப்படுத்தி இருப்பதைக் குறிப்பிட்டு, விக்னேஸ்வரனின் கருத்துக்களை மிகைப் படுத்துவதற்கு எதிராக புனிதன் எச்சரித்தார்.  

1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட  ம.இ.க மலேசியாவின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும் மற்றும் பாரிசன் நேஷனல் (பி. என்) கூட்டணியின் நிறுவன உறுப்பினர் ஆகும்.  1957 முதல் 2018 வரை பி. என். இன் இடைவிடாத ஆட்சியின் போது இந்த கட்சி முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தது, ஆனால் தற்போது, அமைச்சரவையில் அது எந்த பதவியையும் கொண்டிருக்கவில்லை.   2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் பிரதிநிதித்துவமின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து இந்திய சமூகத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டபோது ம.இ.காவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது.

இதுவே பாரிசானில் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. 2013 மற்றும் 2018 தேர்தல்களில் இந்த போக்கு மோசமடைந்தது, ம.இ.கா  இந்திய நலன்களுக்கு திறம்பட வாதிடத் தவறிவிட்டது என்ற பொதுக் கருத்து காரணமாக மேலும் தளத்தை இழந்தது. 

2022 பொதுத் தேர்தலுக்கு, நாடாளுமன்றத்தில்  ம.இ.காவின் பிரதிநிதித்துவம் ஒரே இடமாக  குறைந்துவிட்டது.  

அக்டோபரில் நடைபெறும் அக்கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திசை முடிவு செய்யப்படும் என்று துணைத் தலைவர் எம். சரவணன் கூறியதை அடுத்து ம.இ.காவின் எதிர்காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.  

உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், ம.இ.க தற்போதைய அரசாங்கத்தில் ஒரு "தேவையற்ற விருந்தினர்" போல் உணர்ந்ததாகவும், அதன் அணிகளில் மூத்த அரசியல் பிரமுகர்கள் இருந்தபோதிலும் எந்த பதவியையும் வழங்கவில்லை என்றும் சரவணன் கூறினார்.  

இருப்பினும், பிஎன் தலைவரும் அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, பிஎன் கூட்டணிக்குள் இருந்தால் ம.இ.கா வின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.