NATIONAL

ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்

31 ஜூலை 2025, 8:33 AM
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் மலேசியா வருகிறார்

ஷா ஆலம், ஜூலை 31 எதிர்வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை  மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதை  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று அதிகாலை 6.50 மணிக்கு டிரம்புடனான தொலைபேசி உரையாடலின் போது அவரது வருகை உறுதி செய்யப்பட்டதாக ஆசியான் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று 13வது  மலேசிய திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் இத்தகவலை  வெளியிட்டார்.

இதனிடையே, இந்த அழைப்பின் போது  புதிய வரி  விகிதத்தை  அறிவிப்பதை ஒத்திவைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.

நான் அளித்த பல விளக்கங்களைத் தொடர்ந்து  அவர் (டிரம்ப்) அடுத்த நாள் வெளியிடப்படவிருந்த வரி விகித அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்தார்.

இந்த அறிவிப்பு நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக இருக்கக்கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

நாளை ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 விழுக்காடு இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்கா  முன்னதாக முடிவு செய்ததிருந்தது.

அதே நேரத்தில் கடந்த  திங்களன்று தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக பிரதமரை டிரம்ப் பாராட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619