ad
NATIONAL

மித்ரா மூலம் 16 உயர் தாக்கமுள்ள திட்டங்களுக்கு அங்கீகரிப்பு

31 ஜூலை 2025, 7:47 AM
மித்ரா மூலம் 16 உயர் தாக்கமுள்ள திட்டங்களுக்கு அங்கீகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 31 - மலேசியாவில் உள்ள இந்தியர்களின் வளர்ச்சிக்காகவும்,

மேம்பாட்டிற்காகவும் இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா) மூலம் இம்மாதம் வரையில் 16 உயர் தாக்கமுள்ள திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற திட்டங்களின் மூலம் மக்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக, கல்வி மற்றும் பயிற்சி, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் சமூக நல்வாழ்விலும் முதன்மை கவனம் செலுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையை உட்படுத்திய, முற்போக்கான மற்றும் தாக்க அடிப்படையிலான அணுகுமுறை, நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தினரையும் உயர்த்தும் மடாணி அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில் தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி, திவேட் தொடர்பான திட்டங்கள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்க முடியாத பல விண்ணப்பங்களும் உள்ளன. அந்த விண்ணப்பங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு தேசிய திவேட் மன்றத்தின் அதிகார வரம்பு மற்றும் பராமரிப்பின் கீழ் நிலைநிறுத்தப்படும்.

அதுமட்டுமில்லாமல், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளின் கீழ் முன்னதாகவே இணைந்திருப்பதால் பரிந்துரைக்கப்பட்ட பல திட்டங்கள் அங்கீகரிக்க முடியாமல் போனது.

எனவே, நியாயமான, சமமான மற்றும் நிலையான வளர்ச்சியின் பலன்களை இந்திய சமுதாயம் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காகப் பல வியூகங்களை மடாணி அரசாங்கம் வருங்காலத்தில் மதிப்பீடு செய்யும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.