கோலாலம்பூர், ஜூலை 29 - இன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே நாட்டின் தலைமை நீதிபதிக்கான நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார். இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இந்த சடங்கில் அவர் பதவி உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
இதற்கு முன்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த 62 வயதுடைய டத்தோ வான் அஹ்மாட், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றார்.
கடந்த ஜூலை 2ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட் அவர்களுக்கு பதிலாக நாட்டின் 17ஆவது தலைமை நீதிபதியாக வான் அஹ்மாட் நியமிக்கப்பட்டார்.
இச்சடங்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஸ்ரீ ஃபடிலா யூசோஃப், சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெர்னாமா