புல்கிசா, ஜூலை 28 - தற்போது அல்பேனியாவின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
புல்கிசா எனும் நகரின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில், சுமார் 90 இராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
பலத்த காற்று மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை நூற்றுக்கணக்கான ஹெக்டேர் காடுகள் மற்றும் புல்வெளிகள் தீக்கிரையாகியுள்ளன. இதில் உயிரிழப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் மூவர் காயம் அடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு கருதி சுமார் 2,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பெர்னாமா