ஒவ்வொரு பிரிவிலும் 30 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார். முதல் பத்து இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். 11-30 வரை வரும் மாணவர்கள் சான்றிதழ்களை பெறுவார்கள் என்றார் இளங்கோவன்.
முதலில் இந்த சதுரங்க போட்டி சிலாங்கூர் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளை மாணவர்களின் சிறப்பான ஆதரவால் தேசிய அளவில் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். நான்காவது முறையாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு வருடமும் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் ஒரு பெரிய சாதனையாக தான் கருதுவதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
இப்போட்டியை பற்றிய தகவல்கள் முகநூல், புலன குழு போன்ற சமூக தளங்கள் மூலம் நாடு முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. அதன் விளைவாக மாணவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரிப்பதாக அவர் விளக்கினார். அதுமட்டுமல்லாமல், வழங்கப்படும் சிறப்பான பரிசு களுக்காகவும் இப்போட்டியில் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.