ad
PENDIDIKAN

மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி

26 ஜூலை 2025, 3:34 PM
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி
மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் 1326 மாணவர்கள் கலந்து கொண்ட சதுரங்க போட்டி

ஷா ஆலம், ஜூலை 26 - தற்போது குகேஷ், பிரக்ஞானந்தா போன்ற இளம் இந்தியர் விளையாட்டாளர்கள் உலகளவில் சதுரங்க போட்டியில் தங்களுக்கென ஓர் தனி இடத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் வரிசையில் மலேசியாவில் வாழும் நம் இந்திய மாணவர்களும் அது போன்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த நான்கு வருடங்களாக மலேசியா அளவில் சதுரங்க போட்டியை மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி வாரியம் நடத்தி வருவதாக அதன் தலைவர் திரு உதயசூரியன் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இன்று மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் நான்காவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் 110 பள்ளிகள் சேர்ந்த மொத்தம் 1326 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், இதுவரை நடைபெற்ற போட்டியில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் எனவும் அவர் மகிழ்ச்சியாக தெரிவித்தார். இதில் ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமை வெளிக்காட்டினர்.

மேலும், சதுரங்க போட்டியில் சிறந்த விளங்க நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த போட்டி நடத்துவதாகவும் உதயசூரியன் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்வில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பக்கபலமாக நிற்கும் பெற்றோர்களே !  என்றார். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு,  கல்வியில் சிறந்து விளங்கவும் பெற்றோர்கள் காட்டும் அக்கறை போற்றத்தக்கவை ஆக உள்ளது என்றார்.

இதுபோன்ற சிந்தனை ஆற்றலை வளர்க்க கூடிய போட்டி நிகழ்வுகளும் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் அவசியத்தை, அதை மேலும் நிலைநாட்டுவதற்கான காரணத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.