ad
ECONOMY

செலாயாங் நகராண்மை கழகம் RM54.11 மில்லியன் மதிப்பீட்டு வரி வசூல்

29 ஜூன் 2024, 3:11 PM
செலாயாங் நகராண்மை கழகம் RM54.11 மில்லியன் மதிப்பீட்டு வரி வசூல்

கோம்பாக், ஜூன் 29: மே 31 நிலவரப்படி RM54.11 மில்லியன் மதிப்பீட்டு வரியை செலாயாங் நகராண்மை கழகம் (எம்.பி.எஸ்) வசூல் செய்துள்ளது. 

அதே காலக்கட்டத்தில் RM5.25 மில்லியன் மதிப்பீட்டு வரி பாக்கிகளையும் எம்.பி.எஸ் வசூல் செய்துள்ளதாக அதன் தலைவர் கூறினார்.

"தற்போதைய மதிப்பீட்டு வரி வசூல் RM58.5 மில்லியன் அதாவது 92.49 சதவீதத்தை உள்ளடக்கியது. மேலும், நிலுவைத் தொகை RM10.68 மில்லியனிலிருந்து 49.13 சதவீதம் வசூலிக்கப்பட்டது," என்று அவர் மெனாரா எம்.பி.எஸ்யில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

மேலும், RM200 மற்றும் அதற்கு மேல் நிலுவை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஏப்ரல் 15 முதல் எம்.பி.எஸ் வாரண்ட்களை செயல்படுத்தி வருவதாக ஷாமான் ஜலாலுடின் மேலும் கூறினார்.

"வாரண்ட் என்பது நோட்டீஸ் (படிவம் E) காலக்கெடு முடிவடைந்ததன் அடையாளமாகும். இதன் மூலம் பாக்கி வைத்திருப்பவர்களுக்கு RM100 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

"மே 31 வரை, 25,598 வாரண்டுகள் செயலாக்கப்பட்டு 18,786 அனுப்பப்பட்டுள்ளன," என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், கடந்த மே மாதம் ``MYMPS`` போர்ட்டல் மூலம் எம்.பி.எஸ் RM568,111.07 வருவாய் ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.

"கடை வாடகை RM287,515, வணிக உரிமம் RM161,716.47, அபாரதம் RM58,040, கட்டிடம் திட்டமிடல் அனுமதிகள் RM47,642 மற்றும் முன்பணம்  RM5,880 ஆகியவற்றிலிருந்து மிகப்பெரிய தொகை வசூலிக்கப்பட்டது.

வணிக உரிமங்கள், கடை வாடகைகள், கட்டிட அனுமதிகள், அபராதங்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றை இணைய விண்ணப்பங்கள் மூலம் புதுப்பித்து பணம் செலுத்தும் வணிகர்களின் வசதிக்காக எம்.பி.எஸ் போர்ட்டலை மேம்படுத்தியுள்ளது,” என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.