ad
ANTARABANGSA

இந்தோனேசியா ஓபனில் வெய் சோங்-காய் வுன் மலேசிய இரட்டையர் அணி முதல் பெரிய இறுதிப்போட்டிக்கு !

9 ஜூன் 2024, 6:21 AM
இந்தோனேசியா ஓபனில் வெய் சோங்-காய் வுன் மலேசிய இரட்டையர் அணி முதல் பெரிய இறுதிப்போட்டிக்கு !

ஜகார்த்தா, ஜூன் 9 - தேசிய ஆடவர் இரட்டையர் ஜோடி மான் வெய் சோங்-டீ காய் வுன் 2024 இந்தோனேசியா ஓபன் பூ பந்து ஆட்டத்தில் நேற்று இரவு சொந்த இடத்தை சார்ந்த சபர் காரியமன் குடாமா-மோஹ் ரெசா பஹ்லேவி இஸ்பஹானியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இந்தோனிசியாவின் இஸ்டோரா செனயன் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மேன்-டீ  இரட்டையர் அணி, போட்டித் தரவரிசையில் இடம் பெறாதவர்கள், 29-வது இடத்தில் உள்ள இந்தோனேசிய ஜோடியை 29-27 என்ற கணக்கில் மூச்சடைக்க கூடிய முதல் செட்டில் தோற்கடித்தார்கள்.

ஆரம்பத்திலேயே பின்தங்கிய இந்த ஜோடி, இரண்டாவது செட்டில் இந்தோனேசியர்களை தோற்கடித்து, 45 நிமிட ஆட்டத்தில் 21-13 என வென்றது.

நாளை இறுதிப் போட்டியில் ஒரு பிரதிநிதியையாவது பார்க்கலாம் என்ற இந்தோனேசியாவின் நம்பிக்கையை இது தகர்த்தது.

இந்த வெற்றியின் மூலம் மதிப்புமிக்க இந்தோனேசியா ஓபனின் இறுதிப் போட்டியில் மலேசியா ஒரு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தது.

தென் கொரியாவின் உலக சாம்பியனான கங் மின்- அயிக் சீ சியாங்  யை முதல் சுற்றில் தோற்கடித்து. இந்தோனேசியா ஓபனில் மேன்-டீ  இரட்டையர் அணி  ஏற்படுத்திய மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மற்றொரு அரையிறுதியில் சீனாவின்  லியாங்-வாங் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரூப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசென் ஆகியோரை வீழ்த்தி இன்று நடைபெறும் இறுதி போட்டியில் மலேசியாவின் மேன்-டீ  இரட்டையர் அணி எதிர்கொள்கிறார்கள்.

போட்டியைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, இந்தோனிசிய  ரசிகர்கள் தங்களுக்கு சில பதட்டமான  சூழ்நிலைகளை வழங்கியதாக மேன் கூறினார், ஆனால் அவரும் அவரது கூட்டாளியும் தங்கள் கவனத்தை அப்படியே வைத்திருக்க முடிந்தது மற்றும் போட்டி முழுவதும் தங்கள் வேகத்தை தக்க வைத்துக் கொண்டனர், குறிப்பாக இரண்டாவது செட்டில்.

"தங்கள் வீரர்கள் வெல்ல வேண்டும் என்று பகைமை கொண்ட ரசிகர்கள் ஆர்பரிப்பால் முதல் செட்டில் நாங்கள் மிகவும் பதட்டமாக இருந்தோம், ஆனால் முதல் செட்டை  வென்ற  பிறகு, இரண்டாவது செட்டில் நாங்கள் மிகவும் அமைதியாக இருந்தோம்.

"நாளை மற்றொரு கடினமான நாளாக இருக்கும், ஏனென்றால் எங்களுக்கு ஒரு பெரிய ஆட்டம் உள்ளது. எனவே, நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்று அவர் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.