ad
ACTIVITIES AND ADS

ஏசான் ரஹ்மா விற்பனை சந்தைக்கு  அமோக வரவேற்பு

30 டிசம்பர் 2023, 12:22 PM
ஏசான் ரஹ்மா விற்பனை சந்தைக்கு  அமோக வரவேற்பு
ஏசான் ரஹ்மா விற்பனை சந்தைக்கு  அமோக வரவேற்பு

செய்தி சு.சுப்பையா

கோத்தாடாமன்சாரா.டிச.30- வசதி குறைந்த மக்களின் வாழ்கை செலவினத்திக்கு உதவும் பொருட்டு சிலாங்கூர் மாநில அரசு நடத்தி வந்த திட்டத்திற்கு மேலும் மெருகு ஊட்டும் வண்ணம், மடாணி  மத்திய அரசின் ரஹ்மா விற்பனை சந்தையுடன்  இணைந்து  ஏசான் ரஹ்மா விற்பனை சந்தை ஆனது.

கோத்தா டாமன்சாரா செக்சன் 6ல் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவாம் இசூவான் காசிம்  இன்றைய விற்பனைக்கு  ஏற்பாடு செய்திருந்தார். இந்த விற்பனை சந்தைக்கு மக்கள் திரண்டு வந்தனர்.

காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை இச்சந்தையை நடத்த ஏற்பாடு நடைபெற்றது. காலை 8.00 மணி முதல் இந்த விற்பனை சந்தைக்கு மக்கள் வரத் தொடங்கினர். காலை 9.00 மணிக்கு பதிவு வேலையை சட்ட மன்ற அலுவலக அதிகாரிகள் தொடங்கினர். காலை 10.00 மணிக்கு 100க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருந்தனர்.

காலை 10.00 மணிக்கு விற்பனை சந்தை தொடங்கியது. காலை 10.30 மணிக்கு 275 பேர் பதிவு செய்து விட்டனர். மக்களின் அமோக ஆதரவினால் காலையில்  ஒருவருக்கு குறைந்த பட்சம் 2 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய், 2 கோழி, 2 தட்டு முட்டைகள், 5 கிலோ அரிசி 2 பேக்கட்டுக்கள் என்று தொடங்கிய இந்த விற்பனை,  சந்தைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்ததால் எல்லா பொருட்களையும்  ஒருவருக்கு  தலா ஒன்று என  கட்டுப் படுத்தினர்.

இதன் வழி இந்த விற்பனை சந்தையில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

காலை 11.00 மணிக்கு இந்த விற்பனை சந்தைக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துவாம் இசூவாம் காசிம் வருகை தந்தார். வருகை தந்த பொது மக்களிடம் நலம் விசாரித்ததோடு கைக் குலுக்கி மகிழ்ந்தார்.

அனைவரையும் உபசரித்த பின்னர் தமது சட்ட மன்ற அலுவலுகம் வழங்கும் சேவை குறித்து விளக்கம் அளித்தார். தமது சேவை மையம் தற்போது கோத்தா டாமன்சாராவில் தொடங்கப் பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமது அலுவலகம் மூலம் சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் 60 வயதிக்கும் மேற்பட்டோருக்கான சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

60 வயது முதியோருக்கான ரி.ம. 150.00 க்கான பற்றுச்சீட்டு, சமூக நல அமைச்சு வழங்கும் நிதியுதவி, உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, 60 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கான இறப்பு உதவிக்கான ரி.ம.500.00 போன்ற திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மேற்கண்ட திட்டங்களுகான பதிவு வேலைகள் செய்ய தயாராக உள்ளனர். அவர்களின் சேவையை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த விற்பனை சந்தை குறைந்த விலை அடுக்கு மாடி பகுதியில் ஏற்பாடு செய்யப் பட்டதால் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டனர். மேலும் மாதத்திற்கு 2 முறை இந்த விற்பனை சந்தையை சுபாங்கிலும் கோத்தா டமன்சாராவிலும் தாம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக அவர் கூறினார்.

கடந்த இரண்டு மாத காலத்தில் 8 விற்பனை சந்தைகளை ஏற்பாடு செய்துள்ளார். அதன்  வழி குறைந்தது 2500 பேருக்கு மேல் இத்திட்டத்தின் மூலம் நன்மை அடைந்துள்ளனர் என்று துவான் இசூவான் காசிம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.