EL

தீவிர வாக்கு வேட்டையில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி வேட்பாளர் தீபன்

2 ஆகஸ்ட் 2023, 4:25 PM
தீவிர வாக்கு வேட்டையில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி  வேட்பாளர் தீபன்
தீவிர வாக்கு வேட்டையில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி  வேட்பாளர் தீபன்

கோலசிலாங்கூர் ஆகஸ்ட் 2 ;- கடந்த சனிக்கிழமை கோலசிலாங்கூர் ஸ்டேடியம் உள் அரங்கில் பாக்காத்தான் ஹரப்பான் -பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான வேட்பு மனு தாக்கல்  இரு கட்சிகளின்  ஆதரவாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது .

அதனை  தொடர்ந்து அன்று முதல்  இன்று வரையிலும்  தனது ஆதரவாளர்களை  திரட்டி வாக்கு வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் எண்: 1 - பாக்காத்தான் ஹரப்பான் புக்கிட் மெலாவத்தி வேட்பாளர் தீபன் சுப்ரமணியம்

ஒற்றுமையுடன்  அனைவருடனும்  இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் இவர்  எல்லா இன மக்களையும்  மரியாதையுடனும்  சந்தித்து பேசி  வாக்கு வேட்டையாடி வருகிறார் .

தனது  லட்சியத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார், நேற்று அவர் ஒற்றுமை மடாணி மலேசியா என்ற கொள்ளையை பறைசாற்றி பிரச்சாரம்  மேற்கொண்டு  வருகிறார். பொது மக்களும் இவர்  செல்லும் இடமெல்லாம் அவரை  மகிழ்வுடன் வரவேற்று தங்களின்  எதிர்பார்ப்புகளை  உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று   தாமான் ஸ்ரீ குவந்தான்  குடியிருப்பு பகுதிகளிலும், மன்மோத் தோட்டப் பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.

எல்லோரிடமும்  இனம் மதம்  பார்க்காமல்  மக்களின்  குறைகளை கேட்டறிந்து , பக்காத்தான் ஹரப்பான்  மாநில அரசின் வெற்றிகளை சொல்லி  மக்களின் ஆதரவை வேண்டுகிறார்.  இந்த முறை தனது எண்: 1 -க்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய  வேண்டி கேட்டுக் கொண்டார்.

தனது  ஆதரவாளர்கள் மக்கள்  குரலை  செவிமடுத்து  சுறுப்பாக கள பணியாற்றுவதாக கூறினார். புக்கிட் மெலாவத்தி N10 தொகுதியின் 1எண் வேட்பாளர் தீபன் சுப்ரமணியம் என்பதை  மக்களுக்கு  எடுத்து சொல்லி ஹரப்பான் சின்னத்திற்கு வாக்களிக்க  அவரும் மக்களை கேட்டுக்கொண்டார்..

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619