EVENT

மாநில நிலையில் பொங்கல் விழாவை நடத்த சிலாங்கூர் அரசு 90,000 வெள்ளி ஒதுக்கீடு

12 பிப்ரவரி 2023, 5:51 AM
மாநில நிலையில் பொங்கல் விழாவை நடத்த சிலாங்கூர் அரசு 90,000 வெள்ளி ஒதுக்கீடு
மாநில நிலையில் பொங்கல் விழாவை நடத்த சிலாங்கூர் அரசு 90,000 வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 12- சிலாங்கூரில் மாநில நிலையிலான பொங்கல் விழாவை ஷா ஆலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடத்த மாநில அரசு இவ்வாண்டு 90,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த கொண்டாடத்தின் பிரதான நிகழ்வு இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வேலையில் ரவாங், தாமான் முஹிபா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதியும் செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் கடந்த 28ஆம் தேதியும் இக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று நிகழ்வுகளும் வெளிப்படைப் போக்கு மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் மாநில அரசின்  பொருளாதார திட்டமிடல் பிரிவின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த பொங்கல் விழாவை மாநில அரசு வருடாந்திர நிகழ்வாக நடத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பொங்கல் நிகழ்வுகள் நடத்தப்படாத போதிலும் அதற்கான ஒதுக்கீட்டை முறையாகப் பயன்படுத்தும் நோக்கில் பொது மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் திட்டத்தை இந்திய சமூகத் தலைவர்கள் மூலம் மேற்கொண்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங், ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் வீ.பாப்பா ராய்டு, ராமு, காந்திமதி, முருகையா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

தாமான் ஸ்ரீ மூடாவைச் பொறுத்த வரை இந்த நிகழ்வு காலை தொடங்கி இரவு வரை பல்வேறு கோலப்போட்டி, சிலம்பப் போட்டி, உறியடித்தல், சமய கேள்வி பதில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய மற்றும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வுகளில் சுமார் 1,500 பேர் வரை கலந்து கொண்டனர். வருகையாளர்களைப் பொறுத்த வரை இந்த நிகழ்வுக்கு ஆலய நிர்வாகத்தினர் நிர்ணயித்த இலக்கு அடையப்பட்டு விட்டது என கணபதிராவ் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619