ECONOMY

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி, ஐவர் காயம்- குளுவாங்கில் சம்பவம்

29 நவம்பர் 2022, 3:36 AM
இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி, ஐவர் காயம்- குளுவாங்கில் சம்பவம்

குளுவாங், நவ 29- கார் மற்றும் வேன் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகினர். இச்சம்பவம், ஜாலான் குளுவாங்-தெங் வா ஹிங் சாலையின் 15வது கிலோ மீட்டரில் நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநரான முகமது ஹபிக் முகமது பைசால் (வயது 20) மற்றும் பயணியான முகமது கைரில் ரோஸ்லி (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.

மற்றொரு பயணியான அரிபுடின் கைரும் அப்துல் காபார் (வயது 21) மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணியும் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் கூறினார்.

குளுவாங்கிலிருந்து வந்து கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் வந்து கொண்டிருந்த வேனை மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619