ECONOMY

நிதிச் சுமையைக் குறைப்பதில் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்

21 ஜூன் 2022, 7:34 AM
நிதிச் சுமையைக் குறைப்பதில் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்
நிதிச் சுமையைக் குறைப்பதில் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்
நிதிச் சுமையைக் குறைப்பதில் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் பேருதவி- பயனாளிகள் பெருமிதம்

ஷா ஆலம், ஜூன் 21- இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்வதில் உதவக்கூடியதாகவும் உள்ளதாக அத்திட்ட பயனாளிகளின் வாரிசுகள் கூறுகின்றனர்.

இருதய நோய் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தன் கணவரை தாம் இழந்து மிகுந்து துயரில் ஆழ்ந்துள்ளதாக எம்.பெரியநாயகி (வயது 59) கூறினார்.

[caption id="attachment_466660" align="alignleft" width="272"] எம்.பெரியநாயகி (வயது 59)[/caption]

எங்களுக்கு குழந்தை இல்லாததால் என் சகோதரர் வீட்டில் தங்கியுள்ளேன். கணவரின் பிரிவு துயரத்தை ஏற்படுத்தினாலும் மாநில அரசின் இந்த உதவி எனது நிதிச்சுமையை ஓரளவு குறைக்க உதவியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த பணத்தை சேமித்து வைத்து மருந்து, உணவு மற்றும் அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தவிருக்கிறேன். என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

வயது மூப்பின் காரணமாக தன் தந்தை கடந்த  ஜனவரி மாதம் உயிரிழந்ததாக இத்திட்ட வாரிசான அஸ்மின் ஷாம் மொக்தார் (வயது 52) கூறினார்.

[caption id="attachment_466661" align="alignright" width="272"] அஸ்மின் ஷாம் மொக்தார் (வயது 52)[/caption]

இறப்பு நேரும் பட்சத்தில் நல்லடக்க சடங்குகளை மேற்கொள்வதற்கு உண்டாகும் செலவை ஈடு செய்ய மாநில அரசின் இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

ஐ.எஸ்.எஸ். எனப்படும் இந்த திட்டத்தை மாநில அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங், தாமான் கோசாசில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.

சுமார் 5 கோடியே 55 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இத்திட்டம் பெடுலி சிஹாட் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாக விளங்குகிறது.

இந்த ஐ.எ.ஸ்.எஸ். திட்டத்தின் கீழ் மரண சகாய நிதியாக 5,000 வெள்ளி மற்றும் நல்லடக்கச்  சடங்கிற்கான தொகையாக 1,000 வெள்ளி வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619