ACTIVITIES AND ADS

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும்

20 பிப்ரவரி 2021, 11:22 AM
இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும்

ஷா ஆலம், பிப் 20- சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 6, கம்போங் லிண்டோங்கான் எம்.பி.பி.ஜே. மண்டபத்தில் நடைபெறும்.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தில் பிஜேஎஸ் 1 முதல் பிஜேஎஸ் 10 வரையிலான குடியிருப்பாளர்கள் கலந்து பயன்  பெறுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக http://screening.selangkah.my  என்ற அகப்பக்கம் வாயிலாக முன்கூட்டியே பதிந்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இதே போன்ற இயக்கம் இன்று சனிக்கிழமை ஷா ஆலம் செக்சன் 7, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெறுகிறது. இதுதவிர, கடந்த 17ஆம்  தேதி ஷா ஆலம், செக்சன் 19, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் 18ஆம்  தேதி பண்டமாரான் ஜெயா, பல்நோக்கு மண்டபத்திலும் இத்தகைய பரிசோதனை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

கடந்த மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடாவில் நடத்தப்பட்ட இப்பரிசோதனை இயக்கத்தில் சுமார் 2,000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக சிலாங்கூர்  மாநில அரசாங்கம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான பல்வேறு கோவிட்-19 சோதனை இயக்கங்களை மேற்கொண்டு வந்துள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619